பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின்மூலம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள நன்மைகளை வியந்தோதும் நூல்கள் நம்மிடம் ஏராளம் உள்ளன. அவற்றில் பலவற்றை இந்தியர்களே எழுதியும் இருக்கிறார்கள். ஆனால் காலனியாதிக்கம் இந்தியாவை எப்படிச் சீரழித்தது என்பதையும் விரிவாக அறிமுகப்படுத்தும் நூல்கள் அரிதாகவே எழுதப்பட்டுள்ளன.
சசி தரூரின் இந்தப் புத்தகம் அந்தக் குறையைத் தீர்த்துவைத்திருக்கிறது. ஏராளமான வரலாற்றுத் தரவுகளையும் நியாயமான வாதங்களையும் முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்நூல் பிரிட்டிஷ் காலனியாதிக்கம் இந்தியாவின் இருண்ட காலம்தான் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவுகிறது.
தவிரவும் காலம் காலமாகச் சொல்லப்பட்டுவரும் பல கற்பிதங்களையும் தகர்த்தெறிகிறது. பின்தங்கியிருந்த இந்தியாவுக்கு நாகரிகத்தை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் பேரரசுதாக் என்பதையும் ஆங்கில மொழி, ரயில்வே, நாடாளுமன்ற ஜனநாயகம் சுதந்தர ஊடகம் ஆகியவற்றை இந்தியர்களின் நலனுக்காகவே பிரிட்டன் அறிமுகப்படுத்தியது என்பதையும் தரூர் ஏற்கமறுக்கிறார்.
பிரிட்டிஷார் இந்தியாவுக்கு இழைத்த அநீதியைத் தகுந்த சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தும் இந்நூலை ஒவ்வொரு இந்தியரும் வாசிக்கவேண்டியது அவசியம். நம் கடந்த காலம் குறித்த பிழையான அல்லது குறையான புரிதலைக் களைய உதவும் ஒரு முக்கியமான ஆவணம் இது.
ஆங்கிலத்தில் வெளிவந்து மிகுந்ந வரவேற்பையும் பாராட்டுதல்களையும் பெற்றிருக்கும் நூலின் An Era of Darkness: The British Empire in India அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பு.
-----
இந்தியாவின் இருண்ட காலம் - சசி தரூர் (Shashi Tharoor), ஜே.கே. இராஜசேகரன் (மொழிபெயர்ப்பாளர்)
Author(s): சசி தரூர்
Edition: First
Publisher: கிழக்கு
Year: 2018
Language: Tamil
Pages: 415
City: Chennai
Tags: தமிழ், Tamil, வரலாறு, History
அட்டை
தலைப்பு பக்கம்
சமர்ப்பனம்
கால வரிசைப்படி நூலில் இடம் பெற்றுள்ள முக்கிய நிகழ்வுகள்
உள்ளே
முன்னுரை
ஒன்றாம் அத்தியாயம் இந்தியாவைக் கொள்ளையடித்த கதை
இரண்டாம் அத்தியாயம் ஆங்கிலேயர் இந்தியாவுக்கு அரசியல் ஒருமைப்பாட்டை அளித்தனரா?
மூன்றாம் அத்தியாயம் ஜனநாயகம், ஊடகம், நாடாளுமன்ற முறை, சட்டத்தின் ஆட்சி
நான்காம் அத்தியாயம் பிரித்தாளும் சூழ்ச்சி
ஐந்தாம் அத்தியாயம் அறிவொளி சர்வாதிகாரம்பற்றிய புனைவு
ஆறாம் அத்தியாயம் பேரரசின் எச்சங்கள்
ஏழாம் அத்தியாயம் நிதி நிலை அறிக்கை - ஒரு பிற்சேர்க்கை
எட்டாம் அத்தியாயம் காலனி ஆதிக்கத்துக்குப் பின் உருவான குழப்ப வாழ்க்கை
நன்றியுரை
Bibliography
குறிப்புகள்
பதிப்புரிமை பக்கம்