முற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில் ஈடுபட்டவர் பஷீர். ‘ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம்’ (வாழ்விலக்கிய இயக்கம்) என்று அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர். இவர்களின் எழுத்தில் புதுவகையை உருவாக்கியவர் பஷீர்.
நடைமுறை உலகை மாற்றிப் புதிய உலகைச் சமைப்பதற்கான அறைகூவலைப் பிற எழுத்தாளர்கள் முன்னிருத்தினர். இந்த முழுமையற்ற உலகத்தை மாற்றி முழுமையான உலகைப் படைப்பது பற்றிய கனவை முன்வைத்தார்கள். ஆனால் பஷீர் இந்த முழுமையற்ற உலகை நேசித்தவராக இருந்தார். தீமையும் கீழ்மையும்இந்த உலகின் உயிரோட்டமான அம்சங்கள் என்று உணர்ந்திருந்தார்.
நடைமுறை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களேஅவரது கதை மாந்தர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையே அவருக்குக் கதை நிகழ்வுகளாக இருந்தன. பொறுக்கிகள், வேசிகள், திருடர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், ஏமாற்றுப்பேர்வழிகள் எல்லாரும் அவருடைய அன்புக்குரிய பாத்திரங்களாக இருந்தார்கள்.அந்தப் பாத்திரங்கள்மீது வாசகரும் அன்பு பாராட்டக் கட்டாயப்படுத்தியதுதான் பஷீர் கலையின் வெற்றி.
---------
பஷீர் கதைகள் - 40 தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்
- மலையாளத்திலிருந்து தமிழில்: குளச்சல் யூசுஃப்
---
Author(s): வைக்கம் முகம்மது பஷீர்
Edition: First
Publisher: காலச்சுவடு
Year: 2020
Language: Tamil
Pages: 518
City: Nagercoil
Tags: தமிழ், Tamil, நாவல், Novel, சிறுகதைகள்
தொகுப்புரை:உம்மிணி வலிய கதைகள்
மொழிபெயர்ப்பாளர் உரை
முன்னுரை :பஷீர் எனும் தனிமரம்
ஜென்ம தினம்
ஐசுக்குட்டி
டைகர்
கள்ள நோட்டு
செகண்ட் ஹாண்ட்
ஒரு சிறைப்பறவையின் புகைப்படம்
மனைவியின் காதலன்
அம்மா
போலீஸ்காரனின் மகள்
அபூர்வ தருணங்கள்
புனிதரோமம்
பூ நிலவில்
அனல் ஹக்
மூடர்களின் சொர்க்கம்
பூவன்பழம்
நிலவைக் காணும்போது
முதல் முத்தம்
கால் சுவடு
ஆளரவமற்ற வீடு
நீலவெளிச்சம்
போலீஸ்காரனின் மகன்
ஏழைகளின் விலைமாது
இடியன் பணிக்கர்
வளையிட்ட கை
உலகப் புகழ்பெற்ற மூக்கு
தங்கம்
ஒரு பகவத் கீதையும் சில முலைகளும்
எட்டுக்காலி மம்மூஞ்ஞு
ரேடியோகிராம் என்னும் ரதம்
பர்ர்ர் . . . !
ஆனைமுடி
எனது நைலான் குடை
ஒரு கணவனும் மனைவியும்
சிரிக்கும் மரப்பாச்சி
நூறுரூபாய் நோட்டு
மனைவியைத் திருடிச்செல்ல ஆள் தேவை
பூமியின் வாரிசுதாரர்கள்
நோட்டு இரட்டிப்பு
தங்க மாலை
சிங்கிடி முங்கன்