பொதுவாக மேடைகளில் உரையாற்ற நான் விரும்புவது இல்லை. ஏனென்றால் நான் மிகவும் மோசமான சொற்பொழிவாளன். அனைத்தையும் விட முக்கியமாக, என்னுடைய ஊடகம் எழுத்து. மேடை அல்ல. ஆகவே என் உரைகள் எல்லாமே முன்னரே தெளிவாக கட்டுரை வடிவில் எழுதப்-பட்டவை. அவற்றை சிலமுறை வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்குவேன். அதை என் கையில் வைத்துக்கொண்டு மேடையேறுவேன்.
எழுதிவைத்துப் பேசுவதனால் நாம் சொல்லப்போவதென்ன என்பது முன்னரே தெளிவாகிவிடுகிறது. நம் உரைக்கு தொடக்கம் முடிவு உடல் என ஒரு வடிவ ஒருமையை நாம் உருவாக்கிக்கொள்ளலாம். உரையின் நீளம் நம் கணிப்புக்குள் நிற்கும். மேலும் ஒரே உரையைத் திரும்பத்திரும்ப நிகழ்த்தும் அபாயத்தில் இருந்து எழுத்துமூலம் தப்பிக்க முடிகிறது.
இத்தனை வருடங்களில் என் உரை நன்றாக இல்லை என்று எவரும் சொன்னதில்லை. நான் மேடைகளைக் கவனமாகத் தேர்வு செய்வதனால் என் உரைகள் எப்போதுமே ஆழமான பாதிப்பை நிகழ்த்துவதையே இதுவரை கண்டிருக்கிறேன். மேலும் பேசுவதற்கு அதுதான் காரணம். இவ்வாறு உரையாற்ற நேர்கையில் அதற்கெனத் தயாரித்த உரையின் ஒரு தொகுப்பு இது.
----
தனிக்குரல் - ஜெயமோகன்
Author(s): ஜெயமோகன்
Edition: First
Publisher: கிழக்கு
Year: 2016
Language: Tamil
Pages: 145
City: Chennai
Tags: தமிழ், Tamil, நாவல், Novel
தலைப்பு பக்கம்
ஆசிரியர் குறிப்பு
சமர்ப்பனம்
பொருளடக்கம்
தன்னுரைத்தல்
பகுதி ஒன்று
1.1. கலை இலக்கியம் எதற்காக?
1.2. சிறுகதையில் என்ன நடக்கிறது?
1.3. குரு என்னும் சுடர்: பேராசிரியர் ஜேசுதாசன் நினைவில்...
1.4. மண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் : நாஞ்சில் நாடனின் கலை
1.5. உடலிலக்கியம்
1.6. வைரம்
1.7. கவிதையின் அரசியல் : தேவதேவன்
1.8. யாமம் : எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு
1.9. கவிதையின் காலடியில் : ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்
1.10. சுவாரஸியம் என்பது என்ன? அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்
1.11. என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?
1.12. நீதியும் நாட்டார் விவேகமும் : பழமொழி நாநூறும்
1.13. விதை மரம்
1.14. மாறுதலின் இக்காலகட்டத்தில்...
பகுதி இரண்டு
2.1. நூலகம் என்னும் அன்னை
2.2. பண்பாட்டு மானுடவியலும் தமிழகமும்
2.3. தன்னை விலக்கி அறியும் கலை
2.4. சுவர்களில்லா உலகம்
2.5. புன்னகைக்கும் பெருவெளி
2.6. தமிழில் சிறுபான்மை இலக்கியம்
2.7. மதமாற்ற தடைச்சட்டமும் ஜனநாயகமும்
2.8. வேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்
2.8. வேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்
2.10. மலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி...
2.11. வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்
பின்னுரை
பதிப்புரிமை பக்கம்