இன்றைய தேதி வரை இருபத்து மூன்றாயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ‘ஆயிரக்கணக்கான சடலங்கள் இறைந்து கிடக்கின்றன. எந்தப் பக்கம் திரும்பினாலும் மனித உடல்கள். அல்லது, இறந்துகொண்டிருக்கும் மனிதர்கள்.’ - ஹமீதியா மருத்துவமனையில் ஒரு தன்னார்வலர் நிரந்தரமாகவும் பகுதியளவிலும் முடமாகிப்போனவர்கள், ஐந்து லட்சம் பேர். ‘அதற்கு முன்புவரை நான் மருத்துவமனை சென்றதில்லை. விஷ வாயு சுவாசித்த பிறகு மருத்துவமனையே பழியாகக் கிடக்கிறேன். சரி இத்தோடு சரியாகிவிடும் என்று ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொள்வேன். இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்னமும் என் உடல் நடுங்குகிறது.’ - ஜகி முகமத், 53 வயது ‘கருச்சிதைவு ஏற்பட்டது போன்ற வலி அது. வீட்டை விட்டு நகரமுடியவில்லை. ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. பாலும், பழமும் சாப்பிடுங்கள், உடலில் வலு இல்லை என்றார் மருத்துவர். எங்கே போவேன்? ரொட்டியே தினமும் கிடைப்பதில்லை.’ - சிதாரா, 40 வயது உலகின் மிகக் கொடூரமான ஒரு பேரழிவை, கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து என்கிறது யூனியன் கார்பைட். வழக்கு விசாரணையும் அவ்வாறே நடந்து முடிந்து, தீர்ப்பும் எழுதப்பட்டுவிட்டது. போபால் என்பது ஒருமுறை நடந்துமுடிந்துவிட்ட ஒரு சம்பவம் அல்ல. இந்நாட்டு மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிகக் கடுமையான பயங்கரவாத வன்முறை. நள்ளிரவில் நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதல். மறக்கவோ மன்னிக்கவோ முடியாத ஒரு துரோகச் செயல்.
--------
போபால் - அழிவின் அரசியல் - மருதன்
Author(s): மருதன்
Edition: First
Publisher: கிழக்கு
Year: 2010
Language: Tamil
Commentary: decrypted from 5F224FFF121C35FA8EC8AF696C32C4CD source file
Pages: 252
City: Chennai
Tags: தமிழ், Tamil, வரலாறு, History
Word Bookmarks
பொருளடக்கம்
நீதியின் மரணம்
1. பூச்சிகள், மனிதர்கள்
2. பீடிகள், மாடுகள், குழந்தைகள்
3. போபால் வரவேற்கிறது!
4. நன்மை, தீமை
5. மண்டை ஓடு
6. நீலம், வெள்ளை
7. ‘நீங்கள் தயாரித்துக்கொண்டிருப்பது அணுகுண்டு!’
8. சாக்லேட் தொழிற்சாலை
9. நஞ்சும் இனிப்பும்
10. மலைப்பாம்புக்கு அருகில்
11. முதல் பலி
12. ஒரு குரல்
13. நேரம் குறிக்கப்பட்டது
14. பழி
15. டாங்கி 610
16. நள்ளிரவில் மரணம்
17. கறுப்பு இரவு
18. ‘அவர்களைத் தடுத்துநிறுத்துங்கள்!’
19. ‘ஆண்டர்சனுக்கு மரண தண்டனை வழங்கு!’
20. பெயரற்றவர்கள்
21. போபால் உங்களை வரவேற்கிறது!
22. தி யெஸ் மென்
23. தொடரும்