பசுமைப் புரட்சி நடந்திருக்காவிட்டால் இந்தியாவில் வறுமையும் பஞ்சமும் கோர தாண்டவம் ஆடியிருக்கும் என்பது போன்ற கூற்றுக்களின் பெறுமானம் என்ன என்பதை இந்நூல் ஆய்வு செய்கிறது. இந்தியாவின் மரபு சார்ந்த வேளாண்மை, அதன் அலாதியான சிறப்பம்சங்கள், அது திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்ட விதம் ஆகியவை பற்றியும் விரிவாகவும் உரிய ஆதாரங்களுடனும் இந்நூல் பேசுகிறது. வறுமை, பஞ்சம், வரப்பிரசாதம் எனப் பல்வேறு கிளைக் கதைகளைக் கொண்ட பசுமைப்புரட்சியின் நிஜக் கதையை அம்பலப்படுத்துகிறது இந்நூல். இந்திய வேளாண்மையைக் காப்பாற்ற இனி என்ன செய்ய முடியும் என்பது குறித்த நடைமுறை சார்ந்த யோசனைகளையும் இந்நூல் முன்வைக்கிறது.
விரிவான வாசிப்பு, ஆழமான அக்கறை, களப்பணி சார்ந்த அனுபவம் ஆகியவற்றினூடே இந்திய வேளாண்மையைக் குறித்த ஆழமான விவாதங்களை சங்கீதா ஸ்ரீராம் முன்வைக்கிறார். சமூக அக்கறையும் தன்னார்வத் தொண்டுள்ளமும் கொண்ட இவரது இந்த நூல் நம் மண்ணையும் மக்களையும் மாறுபட்ட கோணத்தில் பார்க்க உதவுகிறது.
-------
பசுமைப் புரட்சியின் கதை - சங்கீதா ஸ்ரீராம்
Author(s): சங்கீதா ஸ்ரீராம்
Edition: 6
Publisher: காலச்சுவடு
Year: 2021
Language: Tamil
Pages: 251
City: Nagercoil
Tags: தமிழ், Tamil, நாவல், Novel, சிறுகதைகள்
முன்னுரை
என்னுரை
1 இந்திய வேளாண் மரபு
2 வேளாண் வரி - சுரண்டலின் தொடக்கம்
3 சுரண்டலின் அடுத்த கட்டம் - பணப் பயிர்களின் அறிமுகம்
4 வேளாண் அறிவியல்: பாரம்பரியமும் நவீனமும்
5 இயற்கை நியதிகளின் மீறல்: இந்திய வேளாண்மையின் சரிவு
6 நவீன வேளாண்மையின் ஊடுருவல்
7 உணவுப் பற்றாக்குறை - உண்மை நிலை
8 சுதந்திர இந்தியாவில் வேளாண்மை
9 அமெரிக்காவின் உணவு உதவியும் PL 480யும்
10 வீரிய விதைகளின் தொழில்நுட்பமும் வரலாறும்
11 ‘பசுமைப் புரட்சி’ இந்தியாவில் அரங்கேறிய கதை
12 மாயச் சுழலில் சிக்கிய விவசாயம்
13 இன்றைய வேளாண் நெருக்கடி
14 சர்வாதிகாரத்துக்கு வன்முறை, ஜனநாயகத்துக்குப் பிரச்சாரம்!
15 எல்லோருக்கும் சோறு போடுமா இயற்கை விவசாயம்?
16 சமுதாய மாற்றத்துக்கான அடிப்படை
17 வேளாண்மையின் இறுதி லட்சியம் என்ன?
குறிப்புகள்