விதமாகவோ, கெட்ட விதமாகவோ அது வந்தே தீரும். அது எப்படி இருந்தாலும் உங்களுக்குச் சாதகமாக அதனை மாற்றிக்கொள்வது எப்படி? ஒரே வழிதான்! ரிஸ்க் எடு தலைவா!
செய்வதையே செய்துகொண்டிருந்தால் இதுவரை கிடைத்ததே இனியும் கிடைக்கும். நீங்கள் மாறவேண்டுமானால் ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும். மறுத்தால், மாற்றம் உங்கள் மீது திணிக்கப்படும்.
அதற்காக, தொட்டதற்கெல்லாம் மாறிக்கொண்டிருக்க முடியாது. மாறவேமாட்டேன் என்று விடாப்பிடியாகப் பிடிவாதம் பிடிக்கவும் முடியாது. எனில், எப்போதெல்லாம் மாறவேண்டும், எப்போதெல்லாம் மாறக்கூடாது? இதுதான் பிரச்னை, இல்லையா? பிரச்னையைப் பிரச்னையாகப் பார்க்க மட்டுமே நாம் பழகிக் கொண்டிருக்கிறோம். பிரச்னையை மட்டும் உங்கள் நெருக்கமான ஃப்ரெண்டாக மாற்றிக் கொள்ள முடிந்தால்? நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அது சாத்தியமா? சாத்தியம். நிச்சயம் சாத்தியம்.
சின்னச் சின்ன சுவாரசியமான கதைகள், நடைமுறைச் சம்பவங்கள் என்று மாற்றங்களை எதிர்கொள்ளும் மந்திர வித்தையை மனத்தில் பதிய வைக்கும் இந்தப் புத்தகம் உங்கள் வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கப் போகிறது. மாற்றங்களை நாமே தேர்ந்தெடுக்கலாம். நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
-----
ரிஸ்க் எடு தலைவா! - சிபி கே. சாலமன்
Author(s): சிபி கே. சாலமன்
Edition: First
Publisher: கிழக்கு
Year: 2006
Language: Tamil
Commentary: decrypted from A019EB4FFFCCF67CBAAC23F47B4D56B4 source file
Pages: 150
City: Chennai
Tags: தமிழ், Tamil, சுயமுன்னேற்றம்
1. பிரச்னையே உனக்கு நன்றி!
2. பெரிய ஆள், சின்ன ஆள்
3. குறைகளுக்கு அப்பால்
4. மாறாத கம்ப்யூட்டர் மாமா!
5. மாற்றங்கள், மோதல்கள்
6. கொஞ்சம் தேநீர், நிறைய ரிஸ்க்
7. நீங்கள் எந்தப் படகு?
8. ‘மாத்தேன் ப்போ!’ மனிதர்கள்
9. என்னால் பறக்க முடியும்!
10. நீங்கள் பலூனா? பேப்பரா?
11. சின்னச் சின்ன மாற்றம், சிறகடிக்கும் மாற்றம்
12. ஒரு சறுக்கு மரம், 15 குப்பைத் தொட்டிகள்