ராணி மங்கம்மாள் - மதுரையை ஆண்ட வீரப்பெண்மணி

This document was uploaded by one of our users. The uploader already confirmed that they had the permission to publish it. If you are author/publisher or own the copyright of this documents, please report to us by using this DMCA report form.

Simply click on the Download Book button.

Yes, Book downloads on Ebookily are 100% Free.

Sometimes the book is free on Amazon As well, so go ahead and hit "Search on Amazon"

இராணி மங்கம்மாள் மதுரையை ஆணட சொக்கநாத நாயக்கரின் மனைவி தன் கணவர் இறந்ததும் மற்ற பெண்களைப் போல் உடன் கட்டை ஏறாமல் தன் மகன் அரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர்க்கு காப்பாளராக இருந்து தன் மதி நுட்பத்தினாலும் வீர தீர செயல்களினாலும் நல்ல ஆட்சியை நல்கினார் தன் மகன் மறைவுக்கு பிறகு தன் பேரன் விஜயரங்க சொக்கநாதருக்கு காப்பளாராக இருந்து ஆட்சி செய்தவர் இவர் மதுரையை 1689 முதல் 1704 வரை ஆண்ட வீரப் பெண்மணி ஆவார். வீரம் என்பது வாள் ஏந்திப் போர்க்களம் போவது மட்டுமன்று தன்னை நம்பிய மக்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி அவர்களுக்கு நல் ஆட்சிவழங்குதும் தான் சாதிக்க வேண்டும் என்ற வேட்கையுடைய பெண்களுக்கு மங்கம்மா வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு அவர் ஆட்சி பொறுப்பேற்ற போது நாட்டை சுற்றிலும் எதிரிகள், ஒரு புறம் முகலாய பேரரசு மற்றொரு புறம் தஞ்சை மராட்டியர்கள் இது போதாது என்று திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகை வேறு இவை அனைத்தையும் தன் தேர்ந்த அரசியல் அறிவாலும் இராஜதந்திரத்தாலும் சமாளித்து மக்களுக்கு நல் ஆட்சியை வழங்கினார் இராணி மங்கம்மாள். மக்கள் நலம் பேணும் பல அறச் செயல்களைச் செய்தார். மதுரையில் பெரியதொரு அன்னச்சத்திரம் அமைத்தார். அது ‘மங்கம்மாள் சத்திரம்’ என இன்றும் அழைக்கப்படுகிறது. புதிய சாலைகள் பலவற்றை அமைத்தார். கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை ‘ மங்கம்மாள் சாலை’ என அழைக்கப்படுகிறது. குதிரைகள், பசுக்கள், காளைகள் முதலியவை நீர் அருந்துவதற்காக சாலையோரங்களில் தண்ணீர்த் தொட்டிகள் அமைக்க ஆணையிட்டார். பொது மக்களுக்காக குடிநீர் ஊருணிகள், கிணறுகள் ஆகியவற்றைத் தோண்டச்செய்தார். தொழில் வளர்ச்சி, வாணிகம், மக்கள் தொடர்பு ஆகியவற்றிற்கு வழிவகுத்தார். கொள்ளிடத்தில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் துன்புற்ற போது அவர்களுக்கு உணவு, உடை, வீடு மற்றும் பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்கு ஆணையிட்டார். வெள்ளத்தால் அழிந்த கரையோரத்துச் சிற்றூர்களையும் சீரமைத்தார். மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக மங்கம்மா விளங்கினார். "ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தைப் கைக்கொண்டு வாழ்வதே தருமம் " என்ற கொள்கையைக் பின்பற்றி கிறிஸ்துவர் மற்றும் இசுலாமியர்களையும் மங்கம்மாள் மதித்தார். ஒரு பெண்ணால் என்ன செய்து விட முடியும் என்ன செய்ய முடியும் என்று கேட்பவர்களுக்கு மங்கம்மாவின் வாழ்க்கை சொல்லும் பதில் “ஒரு பெண்ணால் நாட்டையே சிறப்பாக ஆட்சி செய்ய முடியும்”. --- ராணி மங்கம்மாள் - மதுரையை ஆண்ட வீரப்பெண்மணி - நா.பார்த்தசாரதி

Author(s): நா.பார்த்தசாரதி
Edition: First
Publisher: Hema
Year: 2020

Language: Tamil
Pages: 225
Tags: தமிழ், Tamil, வரலாறு, History

1. சித்ரா பெளர்ணமியன்று கிடைத்த செய்தி
2. சின்ன முத்தம்மாளுக்குப் பெரிய முத்துமாலை
3. பாதுஷாவின் பழைய செருப்பு
4. இராயசம் அச்சையாவும் ரகுநாத சேதுபதியும்
5. பக்கத்து வீட்டுப் பகைமை
6. கிழவன் சேதுபதியின் கீர்த்தி
7. வஞ்சப் புகழ்ச்சி வலை
8. பாதிரியார் வந்தார்
9. சகலருக்கும் சமநீதி
10. ராஜதந்திரச் சிக்கல்
11. உதயத்தில் நேர்ந்த அஸ்தமனம்
12. பேரன் பிறந்தான்
13 . கண்கலங்கி நின்றாள்
14. இடமாற்ற எண்ணம்
15. சாதுரியமும் சாகஸமும்
16. ஒரு மாலை வேளையில்...
17. கெட்ட சொப்பனமும் குழப்பமும்
18. சேதுபதியின் சந்திப்பு
19. நம்பிக்கைத் துரோகம்
20. அபவாதமும் ஆக்கிரமிப்பும்
21. இஸ்லாமியருக்கு உதவி
22. காவிரி வறண்டது!
23. சேதுபதியின் மூலபலம்
24. பிரிட்டோ பாதிரியார் கொலையும் பின் விளைவுகளும்
25. பாவமும் பரிகாரங்களும்
26. பேரனின் ஆத்திரம்
27. விஜயரங்கன் தப்பி விட்டான்
28. மங்கம்மாள் சிறைப்பட்டாள்
29. பிரக்ஞை நழுவியது!
30. இருள் சூழ்ந்தது
முடிவுரை