கிரெட்டா துன்பர்க் - சிறு அக்கினிக் குஞ்சாக கிரெட்டா முன்னெடுத்த போராட்டம், உலகெங்கும் உள்ள சிறார் மத்தியில் பரவி பெரும் சுடராக இன்றைக்கு ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. ஆர்ப்பாட்டமற்ற, அதேநேரம் உறுதியான கிரெட்டாவின் குரலுடன், லட்சக்கணக்கான குரல்கள் இன்றைக்கு இணைந்துள்ளன. ஒரு சிறுமியின் எதிர்ப்புக்குரல் இன்றைக்குப் பேரோசையாக மாறியிருக்கிறது. காலநிலை மாற்ற நெருக்கடி என்ற பிரச்சினையை உலகம் இன்றைக்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.
காலநிலை மாற்றம் - பூவுலகு அழிவின் விளிம்பை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. இப்படிச் சொல்வதால் புவி ஒட்டுமொத்தமாக அழிந்துவிடும் என்று அர்த்தமல்ல. அதேநேரம் உலக சராசரி வெப்பநிலை உயர்ந்துகொண்டே போகிறது; மழை, புயல், வெள்ளம் போன்றவை தாறுமாறாக அதிகரித்திருக்கின்றன; முன்பு இயற்கைப் பேரிடராகக் கருதப்பட்டவை இன்றைக்கு கணிக்க முடியாத தன்மையையும் ஆபத்தையும் உருவாக்கத் தொடங்கிவிட்டன. இப்படி ஒட்டுமொத்த உலகுக்கே ஆபத்தை உருவாக்கும் ஒன்றாகக் காலநிலை மாற்றம் உள்ளது. புவியின் இயல்பு இப்படிக் குலைந்துபோனதற்குக் காரணம், இயற்கைக்கு எதிரான நவீன வளர்ச்சிகளும் நுகர்வுமய மனிதச் செயல்பாடுகளும்தான். சிக்கலான அறிவியல், சுற்றுச்சூழல் பிரச்சினையாகக் கருதப்படும் காலநிலை மாற்றம், புவிவெப்பமாதல் பற்றி 60 சொற்களில் புரிந்துகொள்ள ஒரு வழிகாட்டி.
--
கிரெட்டா துன்பர்க் ஓர் அறிமுகம் - ஆதி வள்ளியப்பன்
Author(s): ஆதி வள்ளியப்பன்
Edition: First
Publisher: எதிர்
Year: 2020
Language: Tamil
Pages: 49
City: Pollachi
Tags: தமிழ், Tamil, வரலாறு, History
கிரெட்டா துன்பர்க் : பூவுலகைக் காக்கப் புறப்பட்ட சிறுமி
கிரெட்டாவைத் தெரியுமா ?
கிரெட்டா துன்பர்க் : சில தெறிப்புகள்
உலகை உலுக்கும் காலநிலை மாற்றம் : ஓர் அறிமுகம்
காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம் : புரிந்துகொள்ள 60 சொற்கள்
காலநிலை மாற்றம்
ஆசிரியரைப் பற்றி