சட்டத்தை மதிக்காத கர்நாடக அரசுகள், ஒற்றுமைக்குரலை ஓங்கி ஒலிக்காத தமிழக அரசியல் கட்சிகள், ஆதாய அரசியலுக்கு அடிபணிந்து போகும் மத்திய அரசுகள், சாதகமற்ற இயற்கை அமைப்பு என்ற நான்முனைத் தாக்குதலின் ஒருங்கிணைந்த வடிவமே காவிரிப் பிரச்னை. இன்றுவரை கொந்தளிக்கும் உணர்வுபூர்வமான ஒரு பெரும் சிக்கலாக, அரசாங்கங்களால் மட்டுமல்ல நீதிமன்றங்களாலும் தீர்க்கமுடியாத ஒரு பெரும் முரண்பாடாக, எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் காத்திருக்கும் ஒரு வெடிகுண்டாக காவிரி வளர்ந்து நிற்பது ஏன்? தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையிலான முதல் மோதல் எப்போது வெடித்தது? இந்த மோதலைத் தீர்க்க இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்னென்ன? அவை ஏன் வெற்றி பெறவில்லை? ஆர். முத்துக்குமாரின் இந்தப் புத்தகம் காவிரி நதிநீர் சிக்கல் குறித்த ஒரு தெளிவான சித்திரத்தை அளிப்பதோடு சிக்கலோடு தொடர்புடைய சமூக, வரலாற்றுப் பின்னணியையும் நடுநிலையோடு ஆராய்கிறது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள்; மத்தியில் இந்திரா காந்தி தொடங்கி மோடி வரையிலான பிரதமர்களின் அணுகுமுறை; கர்நாடகத் தலைவர்கள் முன்னெடுத்த அரசியல்; காவிரி தீர்ப்பாயத்தை முன்வைத்து நீதிமன்றத்திலும் வெளியிலும் நடைபெற்ற விவாதங்கள் என்று பல்வேறு கோணங்களில் இருந்து காவிரியை ஆராய்கிறது இந்நூல். எம்.ஜி.ஆர் காலத்தில் எழுந்து அடங்கிய மேகாதாட்டூ தடுப்பணை விவகாரம் தற்போது மீண்டும் வேகமெடுத்திருக்கும் விதம் தனி அத்தியாயமாகவே தரப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை பற்றியும் மோடி அரசின் ஒற்றைத் தீர்ப்பாய யோசனையின் அபாயம் பற்றியும் கோடிகாட்டுகிறது இந்தப் புத்தகம்.
காவிரி அரசியலும் வரலாறும் - ஆர்.முத்துக்குமார்
Author(s): ஆர்.முத்துக்குமார்
Edition: First
Publisher: கிழக்கு
Year: 2017
Language: Tamil
Pages: 186
City: Chennai
Tags: தமிழ், மொழி, Language, Tamil, வரலாறு, காவிரி
அட்டை
தலைப்பு பக்கம்
ஆசிரியர்குறிப்பு
சமர்ப்பனம்
என்னுரையாகச் சில குறிப்புகள்
உள்ளே
1. முதல் சிக்கல்
2. 1892 ஒப்பந்தம்: முக்கிய அம்சங்கள்
3. முதல் தீர்ப்பாயம்
4. 1924 ஒப்பந்தம்
5. நதிநீர்ச் சட்டங்கள் 1956
6. தீர்ப்பாயம் கோரி முதல் வழக்கு
7. இந்திராவின் தலையீடு
8. காவிரி ஒப்பந்த வரைவு 1974
9. மன்னார்குடி ரங்கநாதன் வழக்கு
10. தீர்ப்பாயம் அமைந்தது
11. இடைக்காலத் தீர்ப்பு
12. இடைக்காலத் தீர்ப்புக்கு எதிர்வினைகள்
13. அரசிதழில் இடைக்காலத் தீர்ப்பு
14. தமிழர்களுக்கு எதிரான கலவரம்
15. அரசியல் அழுத்தம், அசையாத பிரதமர்
16. ஜெயலலிதா உண்ணாவிரதம்
17. அலகா கமிட்டியும் ஐ.கே. குஜ்ராலும்
18. வாஜ்பாய் வகுத்த திட்டம்
19. நதிநீர் ஆணையம் அமைந்த
20. தீர்ப்பாய இறுதித் தீர்ப்பு
21. காவிரி மேலாண்மை வாரியம்: அமைப்பும் அதிகாரமும்
22. இறுதித் தீர்ப்புக்கான எதிர்வினைகள்
23. முடக்கப்பட்ட தீர்ப்பும் ஜெயலலிதா வழக்கும்
24. மேகேதாட்டு அணைச் சிக்கல்
25. அணை விவகாரமும் ஐம்பது டிஎம்சியும்
26. தமிழர்களுக்கு எதிரான கலவரம்
27. உமா பாரதி நடத்திய பேச்சுவார்த்தை
28. மேலாண்மை வாரியம்: தடுமாறிய மத்திய அரசு
29. தற்கொலைப் பாதையில் தமிழக விவசாயிகள்
30. ஒற்றைத் தீர்ப்பாயம் என்றொரு அபாயம்
பின்னிணைப்புகள்
பதிப்புரிமை பக்கம்