ஓர் ஆண்டில் இந்தியர்கள் மிக அதிகம் எதற்காகப் புலம்புவார்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தால் முதலிடத்தில் வரக்கூடிய பிரச்னை எரிபொருள் விலை ஏற்றம். பெட்ரோல், டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் உயர்கிறது என்று செய்தி வந்த உடனேயே சமூக வலைத்தளங்களில் அரசைத் திட்டியும் சபித்தும் சொற்பொழிவாற்ற ஆரம்பித்துவிடுவார்கள். ஓரிரு மாதங்களுக்குப் பிறகு ஏறிய விலையில் சிறிது குறையும். அதிர்ஷ்டம் இருந்தால் நிறையவே குறையும். ஆனால் மீண்டும் ஏறும். இது இன்று நேற்று நடப்பதல்ல. ஆண்டாண்டுக் காலமாக உலகம் முழுவதும் நிகழ்வது.
ஏன் ஏறுகிறது எரிபொருள் விலை? யார் ஏற்றுகிறார்கள்? கச்சா எண்ணெயின் விலையைத் தீர்மானிப்பது யார்? பெட்ரோலியக் கச்சா எண்ணெய் எந்தெந்தத் துறைகளில், என்னென்ன விதங்களில் உபயோகமாகிறது என்பது தெரிந்தால் இதன் பின்னால் நடைபெறும் அரசியல் முழுவதுமாகப் புரியும்.
காசு. கொஞ்ச நஞ்சக் காசல்ல. கோடானுகோடி மில்லியன், பில்லியன், ட்ரில்லியன் டாலர்களிலான காசு. உற்பத்தியாளர்களின் காசு. வாங்குபவர்களின் காசு. இடைத்தரகர்களின் காசு. லைசென்ஸ் காசு. பர்மிட் காசு. ஷிப்பிங் காசு. லஞ்சக் காசு. காசு, காசு, காசு, காசு என்று ஒரு பக்கம் முழுதும் எழுதி நிரப்பி ஒரு தியானம் போல் அதனைக் கூர்ந்து கவனியுங்கள்.
நாம் பார்த்திராத பணம் அது. நமது கவலை ஐம்பது பைசா விலை உயர்வு. அதற்கான காரணம் புரியவேண்டுமானால் இந்தத் துறையில் புழங்கும் பணத்தைப் பற்றிப் பூரணமாகத் தெரிந்துகொண்டாக வேண்டும்.
ஆனால் பெட்ரோலியப் பொருளாதாரத்தின் அடி ஆழம் வரை ஊடுருவிப் புரிந்துகொள்வது என்பது இயலாத காரியம். அதே சமயம், சாதாரண மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் விஷயங்களின் அடிப்படையைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதற்குத்தான் உதவுகிறது இந்த நூல்.
----------
ஆயில் ரேகை: பதற வைக்கும் பெட்ரோலின் கதை - பா.ராகவன்
Author(s): பா. ராகவன்
Edition: First
Publisher: கிழக்கு
Year: 2016
Language: Tamil
Pages: 185
City: Chennai
Tags: தமிழ், Tamil, வரலாறு, History
ஆயில் ரேகை
1. சில மன்னார்சாமிகள்
2. ஆறு கால பூஜை
3. அடி மடியில் கை வை
4. உனக்குத் தடா!
5. சவாலே சமாளி
6. மடிப்பிச்சை
7. பெட்ரோலிற்கு மாற்று!
8. என் வழி தனி வழி
9. நண்பா, நண்பா!
10. எண்பெய் எனக்கு மட்டுலம சொந்தம்
11. அதிரடி நாயகன் சதாம்
12. யுத்த காண்டம்
13. கொசு அடித்த கதை
14. வீர உரை
15. மன்னரின் கணக்கும் மற்றவர் கணக்கும்
16. ஐந்தாவது தாதா
17. மாடி வீட்டு ஏழை
18. தரகர் காண்டம்
19. ரட்சகன்
20. பத்தொன்பதாயிரம் பேர் பிரச்னை
21. முதலீட்டாளர் ஒசாமா
22. உணவுக்கும் எண்ணெய், ஊழலுக்கும் எண்ணெய்
23.ரகசியக் கனவுகள் ஜல் ஜல் ஜல்!
24. எனக்குத்தான் குஸெஸ்தான்!
25. டாலருக்கு வேட்டு?
26. பாகு
27. நல்ல எண்ணெய் எனக்கு, கள்ள எண்ணெய் உனக்கு!
28. பத்து பேருக்குப் பங்கு
29. சைக்கிளுக்கு ஜெ!
பின்னிணைப்பு