மரபான பிற நாட்டுப் பண்பாடும் ஒரு நாட்டினருக்கு உகந்ததன்று. எடுத்துக்காட்டாக, கிரேக்கக் காட்சியியலை உலகப் பொதுமை வாய்ந்தது போலக் கருதி ஆங்கிலேயரும், ஐரோப்பியரும் தத்தம் காட்சியியலின் வரலாற்று மூலம் என்று காட்டுகின்றனர். இது, தத்தம் நாடுகளில் உள்ள மரபு வழிக் குடிகளின் பண்பாட்டை மறைப்பதற்கும், புறக்கணிப் பதற்கும் ஆளும் குலத்தவர் கையாளுகின்ற ஓர் உத்தி எனலாம். அவ்வாறே , தமிழ்க் காட்சியியலிலும் தன் அடிப்படைகளைக் கிரேக்கக் காட்சியியலினின்று பெறுவது ஏற்புடையதன்று.
Dr. நிர்மல் செல்வமணி
மேலும். தமிழ் மரபு காக்கும் தொல்காப்பிய மரபியலுள் தொல்காப்பியர் இத்துறை இலக்கணத்தை வைத்துச் சென்ற மையாலும், தமிழ் மரபுவழி இத்துறையை மீட்டுருவாக்கம் செய்யவேண்டியதாயிற்று.
மரபான தமிழ்க் காட்சியியல் யாது? இக்கேள்விக்கு விடை காண முயன்ற மரபுவழிச் சிந்தனையாளர் சைவ சித்தாந்தமே தமிழ்க் காட்சியியல் என்று தமிழ்க் காட்சியியலை மட்டும் எடுத்தோதும் தொன்மை யான தனி நூல் எதுவும் இதுவரை நமக்குக் கிட்டாததால், பல நூல்களில் பரவி விரவியுள்ள துறைச் செய்திகளை இனங் கண்டு தொகுத்து விளக்குவதே இந்நூல் கையாளும் நெறி. இத்துறைக்கான தொன்மையான மூலங்களில் வளம் மிக்கது தொல்காப்பியமே. தமிழிசைக்குச் சிலப்பதிகாரம் போல, இத் துறைக்குத் தொல்காப்பியம் அமைகின்றது. காட்சி, காண்டிகை (syllogism), உத்தி போன்ற அடிப்படைத் துறைச் சொல்களும். இத்துறை நெறியியலின் எலும்புச் சட்டகமான முப்பத்திரு உத்தி வகைகளும் ஒல்காப் புகழ் தொல்காப்பியத்துள்ளேயே மௌன நிலையில் மறைந்திருந்தன. இன்று இம்மீட்டுருவாக்க நூலின் வழி அவை மீண்டும் பேசத் தொடங்கியுள்ளன என்பதும் மிகையோ?
தமிழ்க் காட்சியியலுக்கொரு தனிநூல் கிட்டாத நிலையில், இத்துறையின் உள் துறைகளை இந்நூல் வகுத்துக்காட்ட வேண்டியதாயிற்று. மேலைக் காட்சியியல் பகுப்புகளான 'அறிவியல்' (இங்கு , விஞ்ஞானத்தைக் குறியாது; epistemology), உண்மையியல் (அதாவது, உள்ளமை இயல்'; ontology), மறைபொருளியல் (metaphysics); தருக்கவியல் (logic), அறவியல் (ethics). கலையியல் (aesthetics) என்பவற்றை அடியொற்றாது காட்சி என்ற சொல்லிலின்றே உள் துறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இப்பகுப்புகள் முடிந்த முடிவானவை அல்ல. செய்மையுறுமாயின் நன்றே.
- நிர்மல் செல்வமணி
Author(s): Nirmal Selvamony
Edition: First
Publisher: International Institute of Tamil Studies
Year: 1993
Language: Tamil
Commentary: Tamil Literature, தமிழ் காட்சி நெறியியல், விஞ்ஞானத்தைக் குறியாது; epistemology), உண்மையியல் (அதாவது, உள்ளமை இயல்'; ontology), மறைபொருளியல் (metaphysics); தருக்கவியல் (logic), அறவியல் (ethics). கலையியல் (aesthetics)
City: Chennai
Tags: Tamil, Literature, தமிழ், Philosophy, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விஞ்ஞானம், epistemology, உண்மையியல், உள்ளமை இயல், ontology, மறைபொருளியல், metaphysics, தருக்கவியல், logic, அறவியல், ethics. கலையியல், aesthetics
I. தமிழ்க் காட்சியியல்
1. நுதலியது அறிதல்
2. இயல்புகள்
3. மூன்று உள் துறைகள்
II. நெறியியல்: நான்கு காட்சியியல் உள்துறைகள்
4. காணுதல்
5. காண் நெறி
6. காட்சி நூல்
6.1 நூல் பொருள் அறிதல்
6.2 அளவியல்
6.3 நூல் அமைப்பு
7. நுவல் மரபு
III. முடிந்தது காட்டல்
துணை நூற்பட்டியல்
உத்திகள் : ஒப்பீடு