செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை; சாகசத் தன்மை கொண்டவை. போலீசில் பிடிபட்டதுமே உண்மைகளை ஒப்புக்கொண்டுவிடுகிற இவர், தன் மீதான வழக்குகளுக்கு வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளாமல் தானாகவே வாதாடுவார். இவரது குறுக்கு விசாரணைகள், போலீஸ் அதிகாரிகளும் நீதிபதிகளும் பயப்படுமளவுக்கு அமைந்திருக்கும். ஒருபுறம் மனிதத்தன்மை யற்றதாக இருக்கும் இவரது செயல்பாடுகளினுள் ஏழைகள் மீதான உள்ளார்ந்த பரிவும் இடைகலந்திருக்கும். திருவனந்தபுரத்திலிருந்து ஒரு முஸ்லிம் பெண்ணை வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக்கொண்ட இவர் ஒரு கட்டத்தில் திருடிய பொருளுடன் குடும்பத்தோடு மைசூருக்குச் சென்று வீதியோரத்தில் பாயாசக் கடை தொடங்குகிறார். பிறகு யூசுஃப் பாட்சா எனும் பெயரில் அங்கே புகையிலை விவசாயத்தில் ஈடுபட்டு ஏழைப் பங்காளன் எனப் பெயர் பெறுகிறார். பிறகு மைசூரில் இவரது வளர்ச்சி கர்நாடக மாநில முதலமைச்சருடன் சேர்ந்து ஹெலிகாப்டரில் பறக்கும் அளவுக்கு முன்னேறுகிறது. மக்களவைத் தேர்தலில் ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுகிறார். மக்கள் செல்வாக்கு மிகுந்தவரும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவருமாக இருப்பதால் ‘மாண்புமிகு’கூட இவரது கைக்கெட்டும் தூரத்தில் வந்து நிற்கிறது. இந்நிலையில், இவர் மைசூரிலிருக்கும் தகவலைக் கேள்விப்பட்டு வந்த கேரளக் காவல் துறை இவரைக் கைது செய்கிறது. ஒரே இரவுக்குள் சம்பாதித்த அத்தனைச் செல்வங்களையும் இழந்துவிட்டு வெறுங்கையுடன் கேரளத்திற்குக் கொண்டுவரப்படுகிறார் மணியன்பிள்ளை
---
திருடன் மணியன்பிள்ளை - ஜி.ஆர்.இந்துகோபன்
Author(s): ஜி.ஆர்.இந்துகோபன்
Edition: First
Publisher: காலச்சுவடு
Year: 2015
Language: Tamil
Pages: 754
City: Nagercoil
Tags: தமிழ், Tamil, நாவல், Novel
பொருளடக்கம்
முன்னுரை
1 - நான்
2 - அம்மா
3 - கல்யாண வீடு
4 - பசி
5 - சைக்கிள் வித்தை
6 - கொலையுண்ட அப்பா
7 - களத்தூர் மீனாட்சி
8 - திருநெல்வேலி
9 - தற்கொலை முயற்சி
10 - தவளக்குழியாரின் திருவசனம்
11 - காணாமல் போனேன் . . .
12 - கள்ளுக்கடை
13 - கடையும் கலாட்டாவும்
14 - திருடன்
15 - நூற்றுப்பன்னிரெண்டு பவுன் ஐயாயிரம் ரூபாய்
16 - அகழ்வோனைக் காத்தருள் புரிந்த காதை
17 - கற்புடை தனம் கனல் போன்றது
18 - களவுக்கலை
19 - வழக்கறிஞர் மணியன்பிள்ளை
20 - பரவசத் திருட்டு
21 - தொண்ணூற்றாறு பவுன் இருபத்து இரண்டாயிரம் ரூபாய்
22 - முதல் திருட்டு
23 - இரவுகள்
24 - மீண்டும் கள்ள டிரெயின்
25 - பெண்கள்
26 - குருநாதன் மணியன்பிள்ளை
27 - வீடு கட்டுவோர் கவனத்திற்கு . . .
28 - டாக்டர்கள் கவனத்திற்கு . . .
29 - டாக்டர் பிள்ளை
30 - வைக்கம் முகம்மது பஷீரைத் தேடி
31 - பரப்பனங்காடி
32 - செண்பகச்சுவட்டில் திருடன்
33 - கடவுச்சீட்டுத் திருடன்
34 - இரட்டைத் திருடன்
35 - சாரும் திருடனும்
36 - கள்ளன் காசர்கோடு
37 - துப்பாக்கி
38 - மணவறைத் திருடன்
39 - சூரியன்
40 - கோட்டயம் கான்
41 - மயக்கு சுகு
42 - ஓட்டம் பிள்ளை
43 - தேங்காய் பாபு
44 - மைசூர் (வரலாற்றுச் சுருக்கம்)
45 - தொடக்கம்
46 - புகையிலை விவசாயம்
47 - பணக்காரன்
48 - கௌரி
49 - ஆபரேஷன் செட்டியார்
50 - பருத்திக் குத்தகை
51 - சலிம்பாஷாவின் சனிக்கிரகம்
52 - வீழ்ந்த நாள்
53 - மைசூரின் மிச்சம்
54 - சித்தப்பிரமை
55 - பெண்கள்
56 - மெகருன்னிஸா
57 - நாட்குறிப்பில்
58 - காபரே
59 - சேச்சி
60 - ஜானகி
61 - உதவாக்கரைப் பணம்
62 - காதல் உணர்வுகள்
63 - மீண்டும் மாலதி
64 - கடத்தல்
65 - பத்மினி
66 - சிறைச்சாலைகள்
67 - முதியவர்
68 - வார்டன்
69 - சுயபாலின்பம்
70 - போலீஸ்
71 - அரை போலீஸ்
72 - பிளேடு
73 - உதவி ஆய்வாளருக்கு விருப்ப ஓய்வு
74 - திருடனும் போலீசும் ஒரே வீட்டில்
75 - பின்தொடரும் போலீஸ்
76 - அமானுஷ்யங்கள்
77 - ஆபரேஷன் கிழவன்
78 - கள்ள நோட்டு குட்டன்பிள்ளையும் மணிராவும்
79 - ஆச்சரியம்
80 - கஞ்சா ஆயில்
81 - தோளில் விழுந்த கை
82 - நடிகர் மணியன்பிள்ளை
83 - சேரூர் சி.பி.
84 - சென்னை
85 - மதம்
86 - பெந்தெகொஸ்தே
87 - மீண்டும் மைசூருக்கு
88 - விதி எழுதும் சுயசரிதை