அயராத உழைப்புக்கு மரியாதை!
திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, அடுத்து திராவிடக் கட்சிகள் ஆட்சியின் அரை நூற்றாண்டு, தொடர்ந்து தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் மு.கருணாநிதியின் சட்ட மன்றப் பணியின் அறுபதாண்டு... இந்த மூன்று தருணங்களும் தமிழ்நாட்டைத் தாண்டியும் இந்தியா முழுமைக்கும் முக்கியமானவை.
ஆனால், இந்தியாவின் தேசிய ஊடகங்கள் வழக்கம்போல இதற்கும் பெரிய கவனம் அளிக்காமலேயே கடந்து போயின. ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆசிரியர் குழுவால் அப்படிக் கடந்து போக முடியவில்லை. எல்லா நிறை - குறைகளைக் கடந்தும், இந்த மண்ணில் மகத்தான ஒரு பணியை, குறிப்பாக சமூக நீதித் தளத்தில் திராவிட இயக்கம் நிறைவேற்றியிருக்கிறது.
அதன் முக்கியமான தளகர்த்தர்களில் ஒருவர் என்பதோடு, இந்த ஐம்பதாண்டுகளில் தமிழகத்தின் நீண்ட கால முதல்வர், சவாலான எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையையும் கொண்டவர் கருணாநிதி. ஜனநாயக நாடு ஒன்றில் 60 ஆண்டு காலம் தொடர்ந்து மக்களால் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறு, அதுவும் சாதி ஆதிக்க இந்திய அரசியலில் ஒரு அழுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்து இப்படி சாதித்த வரலாறு கருணாநிதியை அன்றி யாருக்கும் இல்லை.
ஆக இந்த முக்கியமான தருணத்தில் அவருடைய பங்களிப்பைப் பேசும் நூல் ஒன்றை ஏன் நாம் கொண்டுவரக் கூடாது என்ற கேள்வியை நாங்கள் கேட்டுக்கொண்டோம். அதற்கான பதில்தான் இந்தப் புத்தகம். கூடவே திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு பின்னணியையும் அதனால் நிகழ்ந்த நல்ல மாற்றங்களையும் இந்நூலில் தொட்டிருக்கிறோம்.
--
தெற்கிலிருந்து ஒரு சூரியன் - திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்!
Author(s): கே. அசோகன்
Edition: First
Publisher: தமிழ்திசை
Year: 2018
Language: Tamil
Pages: 567
City: Chennai
Tags: தமிழ், Tamil, வரலாறு, History
Cover Page
Signature
உள்ளே..
அயராத உழைப்புக்கு மரியாதை!
ஐந்து முன்னோடிகள்!
இரு பெரும் தலைவர்கள்
திராவிடக் கப்பல் சென்றடைய வேண்டிய கூட்டாட்சித் துறைமுகம்!
கூட்டணியும் கூட்டாட்சியும்!
வடக்கின் வளர்ச்சிக்கு ஒரு தெற்கத்திய முன்மாதிரி!
இந்திய மாநிலங்களின் உரத்த குரல்!
இந்தியாவின் தலைநகரம் டெல்லி அல்ல; மெட்ராஸ் என்று எழுதின பத்திரிகைகள்!
தமிழகம் என்கிற ஜனநாயகத் தீவு!
தமிழகத்துக்கு வெளியிலிருந்து ஒரு மதிப்பீடு!
தமிழ்நாடு முன்னுதாரணமாகும் புள்ளி!
தமிழ்த் திராவிடம் என்ற தனித்துவம்!
தமிழ்நாட்டின் துணை தேசியவாதம் எப்படி சமூக நலனை வளர்த்தெடுத்தது?
காஷ்மீரும் தமிழகமும் இரு முனைகளின் ஒரே குரல்!
கருணாநிதியின் வாழ்க்கை ஒரு சமூகப் புரட்சி!
தமிழ்நாடும் பஞ்சாபும் எங்கே ஒன்றுபடுகின்றன?
அரசியலமைப்பு மாற்றத்துக்கு வட கிழக்கு குரல் கொடுப்பது ஏன்?
வங்காளிகளுக்குமான போராளி கருணாநிதி!
திராவிட இயக்கமும் மராத்தா இயக்கமும்!
எனக்கு ஏன் தமிழகம் பிடிக்கும்?
இந்தி ஆதிக்க எதிர்ப்புணர்வைத் தமிழர்களிடமிருந்தே கற்றோம்!
எதிர்ப்புகளின் வடிவங்கள்!
திராவிட இயக்கம் திராவிடக் கட்சிகள் ஆட்சி: ஒரு மறுபார்வை!
தமிழ்ச் சமூகத்துக்கு அரசியல் கற்றுக்கொடுத்த அறிவியக்கம்!
சித்திரக் கதைகள் எனும் ஆயுதம்!
திராவிட இதழ்கள்!
பழைய வாசிப்பு இயக்கத்தைத் திமுக கையில் எடுக்க வேண்டும்!
அடுத்தடுத்த சமூகங்களுக்கு அதிகாரம் செல்ல வேண்டும்!
திராவிடக் கட்சிகள் சாதித்தது என்ன?
சட்டக் குறியீடுகள் காட்டும் அக்கறைகள்!
அரிசியல்!
சமூக நலத் திட்டங்களின் முன்னோடி!
மூன்றாம் இடம் முதலிடமாகும் கதை!
கற்பென்ற சொல்லே பித்தலாட்டம் என்று சொல்ல யாரிருந்தார்கள் வரலாற்றில்?
கிராமத்துக்கு வந்த விடுதலை!
சாதி ஒழிப்பில் திராவிட இயக்கம் நெருக்கமான கூட்டாளி!
டிவிதான் பழங்குடி மக்களை உலகத்தோடு இணைத்தது!
திராவிட அரசியல் தமிழ் முஸ்லிம்களின் அரசியல் தாய்நிலம்!
திராவிட இயக்கத்துக்குத் தோள் தந்த பிராமணர்கள்!
திராவிட ஆட்சியில் பிராமணர்கள்:கற்பிதங்கள், கற்பனைகள், உண்மைகள்!
திராவிடம் பனை மரம்... நின்று பயன் தரும்!
தொடக்கக் கல்வி பொறுப்பேற்பு ஒரு சாதனை!
திராவிடக் கட்சிகளே அதிகமான பாசனத் திட்டங்களை நிறைவேற்றின!
வேளாண்மையில் பெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது தமிழகம்!
திராவிடச் சித்தாந்த பலம்தான் எதிர்கால இந்தியாவைத் தூக்கி நிறுத்த வேண்டும்!
கருணாநிதிக்கு ஈடு கருணாநிதிதான்!
தன் கதையைத் தானே எழுதிக்கொண்ட கதாசிரியர்!
தலைவர் என்றொரு அப்பா!
தந்தையுமானவர்!
இந்தப் பிறவி தலைவருக்கானது!
கருணாநிதியின் ஒருநாள்!
எங்கிருந்து படம் எடுத்தாலும் கலைஞர் கண் அதை அறியும்!
சொந்த ஊர்!
‘வணக்கம்.. தலைவர் இல்லம்!'
ஆறு தருணங்கள்!
மானமிகு சுயமரியாதைக்காரன்!
அரசியல் தலைவர் கருணாநிதி
கட்சிக்காரன்!
கலைஞரை ஏன் பிடிக்கும்னா…
உலகத் தமிழர்களுக்கான உரிமைக் குரல்!
ஒரு முஸ்லிமாகவே சிந்தித்தவர் கருணாநிதி!
கருணாநிதியின் மனசாட்சி!
அறிவாலயத்தின் கதை!
திமுகவின் கட்டுக்கோப்புக்கு ஜனநாயகமே காரணம்!
திமுக மாவட்டச் செயலாளர் போர்த் தளபதி மாதிரி தயாராக இருக்க வேண்டும்!
ஆட்சியாளர் கருணாநிதி
சட்ட மன்ற நாயகர் கருணாநிதி
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி!
தமிழ்தான் எங்கள் இணைப்புச் சங்கிலி!
சட்ட மன்ற உறுப்பினர்கள் பார்வையில் முதல்வர் கருணாநிதி!
கலைஞர் வேகத்துக்கு அதிகாரிகள் ஈடுகொடுப்பது சிரமம்!
காவல் துறைக்கும் வளர்ச்சிக்குமான பிணைப்பை உணர்ந்தவர்கள் நம் தலைவர்கள்!
கால மாற்றத்தை முன்கூட்டிக் கணிப்பவர் கலைஞர்!
சைவ மடாதிபதி மீன் கூடை சுமந்த வரலாறு நம்முடையது!
ஒரு முதல்வருக்கான எல்லைக்குள் அவர் போராடினார்!
இலங்கை விவகாரத்தில் என் மீது கருணாநிதிக்கு திருப்தி இல்லை!
கருணாநிதியின் கட்டுமானங்கள்!
திட்டினாலும் அப்பனைத்தானே கும்பிட முடியும்!
எழுத்தாளர் கருணாநிதி
கலைஞராக இருப்பதன் முக்கியத்துவம்!
கருணாநிதி தலைமுறையின் முக்கியத்துவம் என்ன?
பிழை பொறுக்க மாட்டாதவர்!
ஊடகமும் கருணாநிதியும்!
அவர் முதல்வர் என்று ஒருநாளும் நான் யோசித்ததில்லை!
ஹிட்லர் படம் போட்டவங்களுக்குத்தானே வலி தெரியும்!
முரசொலியில் தப்பு வந்தால் அலுவலகத்தையே பூட்டிவிடுவார் தலைவர்!
அண்ணா.. இதய மன்னா!
திரைக்கலைஞர்!
கலைஞர்களும் கலைஞரும்!
கண்ணன் + காண்டீபன் = கலைஞர்!
கலைகளிலே அவர் கதை வசனம்!
பராசக்தி: ஒரு நினைவுகூரல்!
தமிழுக்கு எவ்வளவு சக்தி என்று கலைஞர் வசனங்கள் மூலமாகத்தான் தெரிந்துகொண்டேன்!
திராவிட இயக்கம் நாளை...