வள்ளல்கள் ஈரேழு பதினான்கு என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன இக்கூற்றிக்கு மாற்றாக வள்ளல்கள் முதற் ஏழு, இடை ஏழு, கடை ஏழு என்போரும் உளர். எப்படியாகினும் வள்ளல் என்றால் நம் நினைவுக்கு வருவது அதிகமான் என்ற அதியமான் நெடுமான் அஞ்சி தான்.
கிடைப்பதற்கரிய சாவா மூவா நெல்லிக்கனியை அவ்வைக்கு ஈந்ததன் மூலம் அவ்வையோடு சேர்ந்து அவனும் சாகா வரம் பெற்றான் சங்க இலக்கியங்கள் இருக்கும், வரை தமிழ் இருக்கும் வரை அதியமான் வாழ்ந்து கொண்டுதான் இருப்பான்.
ஒருவன் எவ்வளவு நல்லவனா இருந்தாலும் வறியவர்க்கு வாரி இழைத்தாலும் புண்ணியங்கள் பல செய்தாலும் நீதி வழங்குவதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஆராய்ந்து நீதி வழங்குவது மன்னனுக்கு அழகு சிறு கவனக்குறைவு கூட பெரிய அழிவுக்கு வித்திடும் நீதி வழுவா பாண்டிய நெடுஞ்செழியன் வாழ்க்கையில் விதி விளையாடியது போன்று அதியமான் வாழ்க்கையிலும் விளையாடியது ஒரு பெண்ணுக்கு நீதி வழங்குவதில் இழைக்கப்பட்ட அலட்சியத்தால் ஒரு சாம்ராஜ்யமே அழிந்தது அதற்க்கு அதியமானும் பலியாகினான்.
இந்நூலில் ஆசிரியர் அதியமானின் ஈகை, கற்றாரை மதிக்கும் மாண்பு, வீரம், கொடை, ஆட்சிமுறை போர்த்திறன், அனைத்தையும் சங்க இலக்கியங்கள் துணைக்கொண்டு நம் கண்முன் விவரிக்கின்றார்.
---
அதிகமான் நெடுமான் அஞ்சி - கி.வா.ஜகந்நாதன்
Author(s): கி.வா.ஜகந்நாதன்
Publisher: Hema
Year: 2020
Language: Tamil
Pages: 96
Tags: தமிழ், Tamil, வரலாறு, History
அதிகமான் நெடுமான் அஞ்சி
1.முன்னோர்கள்
2. அதிகமானும் ஔவையாரும்
3. வீரமும் ஈகையும்
4. அமுதக் கனி
5. படர்ந்த புகழ்
6. ஔவையார் தூது
7. கோவலூர்ப் போரும்
8. இயலும் இசையும்
9. சேரமான் செய்த முடிவு
10. போரின் தொடக்கம்
11. முற்றுகை
12. அந்தப்புர நிகழ்ச்சி
13. வஞ்சமகள் செயல்
14. போர் மூளுதல்
15. முடிவு