ஆண் பெண் அன்புறவு செம்புலப் பெயல் நீர்போலத் தாம் கலக்கின்றன. காதலர்கள் கணவன் மனைவியர் ஆகின்றனர். ஓருயிர் ஈருடல் ஆகின்றனர். வாழ்வின் இரு சிறகுகள் ஆகி நம்பிக்கையை வேரும் விழுதுமாகப் பெறுகின்றனர். தாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என உழைக்கின்றனர் - உயர்கின்றனர். உலகை வாழ்விக்கப் பிறந்த ஆண் பெண்ணின் அன்புறவு இதுதான். சமூகத்தின் அங்கம் இவர்கள். நாட்டின் உலகின் உறுப்பினர்கள் இவர்கள். இவர்கள் வாழ்வின் வழிகாட்டி இயற்கையும் இயற்கை நெறிகளும்தான்.
ஆண் பெண் அன்புறவு வாழ்க்கையைத் தமிழிலக்கியம் அகம் என்று பேசும் பாடும் கூத்திடும். சங்ககால ஐந்திணை அகப் பாடல்களைப் போல உலகில் எம் மொழியிலும் 2000 ஆண்டுகட்கு முன்னர் காணவே முடியாது. சீன ஜப்பான் தனிப் பாடல்கள் பத்து விழுக்காடு சற்றே நெருங்கி வரக் கூடும். அணுவைத் துளைத்து எழுகடலைப் புகுத்திய முப்பாலில் மூன்றாம் பாலான காமத்துப்பால் பாடல்கள் ஆண் - பெண் காதலின்ப உறவுகளைப் புல்லை வயப்பாக்கும் பனித்துளியில் செங்கதிரையே காட்டுவது போல ஆண் பெண் - தோழமையை - அன்பைக் காதலைக் காட்டும் வாழ்க்கைக் கண்ணாடி எம் மொழியிலும் இல்லை.
திருக்குறள் காமத்துப்பாலுக்குப் பரிமேலழகர் முதல் படிப்பறிவோ பட்டறிவோ அற்ற நெடுஞ்செவிர்கள் வரை உரை கண்டாயிற்று. காமத்துப் பாலின் ஒவ்வொரு குறளும் அவ் உரைகளால் ஆண் பெண் அன்பு வாழ்வின், காதலியக்கத்தின் உள்ளொளியைக் காண முடியாது. கண்டுரைக்கவும் முடியாது. காதல் குறளின் கருத்தாழ்ந்த அமைதியும் அன்பின் உணர்வும் உணர்ச்சியும் கடலின் பெரிது. வானினும் உயர்ந்தது, புடவியினும் படர்ந்தது. அதற்கு ஒரு விளக்கம் போல இத் தாவோ (இயற்கை நெறி) நூல் உள்ளது.
----------
தாவோ: ஆண் பெண் அன்புறவு - ஆங்கில ஆக்கம் - இரே கிரிக்கு - தமிழாக்கம் த. கோவேந்தன்
Author(s): தா. கோவேந்தன்
Edition: First
Publisher: உலக இலக்கியக் கழகம்
Year: 1998
Language: Tamil
Commentary: decrypted from 2313A37EA68412DA1558DB7172649F51 source file
Pages: 94
City: Chennai
Tags: தமிழ், Tamil, சுயமுன்னேற்றம்
தாவோ - இயற்கை நெறி
இயற்கை நெறி
ஆண்- பெண்
தனிமை - இணைமை
வன்மை / மென்மை
மாறுதல் / மாறாமை
கண்டெடுத்தல்/இழத்தல்
கொடுத்தலும் / பெறுதலும்
நிறைவு / குறைவு
ஒன்றுதல்