சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான விகடன் விருது 2016 பெற்ற புத்தகம் இது.
பத்து வயதுக்குட்பட்ட குழந்தையின் உளவியலில் நம்ப முடியாத கற்பனைகளும், அதிசயங்களும் அற்புதங்களும் இன்பத்தை ஏற்படுத்துகின்றன. கிளர்ச்சியடைய வைக்கின்றன. மனதில் திருப்தியை ஏற்படுத்துகின்றன. குழந்தைகளின் படைப்பூக்கத்தைத் (Creativity) தூண்டி விடுகின்றன. குழந்தைகளின் தனித்துவமான ஆளுமைக்கு அஸ்திவாரம் போடுகின்றன.
வண்ணங்களும், விசித்திரமான, கோமாளித்தனமான, நம்பமுடியாத, கதாபாத்திரங்களும் கதைகளும் குழந்தையின் உணர்வு உலகை விரிக்கின்றன. குழந்தைகள் யதார்த்தத்தில் போலச் செய்வதின் மூலம் தன் படைப்புணர்வை வெளிப்படுத்துகின்றன. அந்தக் கதைகளில் உள்ள கருத்துகளும், அறவிழுமியங்களும் குழந்தைகளின் ஆழ்மனதில் மறைமுகமான கல்வெட்டாய் பதிந்து விடுகின்றன.
மாயக்கண்ணாடி தொகுப்பிலுள்ள கதைகள் சிறுவர்களுக்கான கதைகள். அதிகாரத்தின் கோமாளித்தனங்களைப் பற்றிய கதைகள். அதிகாரம் பற்றிய நுண்ணுணர்வினை குழந்தைகளுக்குச் சொல்ல முயற்சிக்கிற கதைகள். அதன் மூலம் அதிகாரத்தின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்த யத்தனிக்கும் கதைகள். அந்த விழிப்புணர்வே அன்பெனும் பெருநதியில் குழந்தைகள் எப்போதும் மூழ்கித் திளைக்க வைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட கதைகள்.
----
மாயக்கண்ணாடி - உதயசங்கர்
Author(s): உதயசங்கர்
Edition: First
Publisher: நூல்வனம்
Year: 2017
Language: Tamil
Commentary: decrypted from 7119725E9316C220EAD43E05A4983286 source file
Pages: 61
Tags: தமிழ், Tamil, நாவல், Novel, சிறுகதைகள்
அதிகாரத்தைப் பகடி செய்ய...
1. புதிய அகராதி
2. காற்றில் கரைந்த பூதம்
3. தொலைந்து போன மழைவிதைகள்
4. பிரம்படி வைத்தியம்
5. ஜங்க் ஃபுட் தேசம்
6. மாயக்கண்ணாடி
7. போக்குவரத்தில் குழப்பம்
8. காற்று பிரியாத கதை
9. காணாமல் போன சொற்கள்
10. மறந்த சிரிப்பு
11. பறவைகள் பறந்து போய் விட்டன