பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்களும், தவறான தொழில்நுட்ப முறைகளும் மனித சமுதாயத்துக்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன. இதில் இருந்து நாம் விடுபட, நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்தான் ‘இயற்கை விவசாய முறை’. இது, மண் வளத்தைப் பெருக்கி பசுமைப் புரட்சிக்கு வித்திடுகிற நமது பாட்டன் காலத்து விவசாய வழக்கம்தான்!
உழவர்கள், பூச்சிக்கொல்லியை அதிகமான அளவில் தெளிப்பதால் நிலம், நீர், காற்று மாசுபடுவது மட்டுமல்லாமல், உயிரினப் பன்மயமும் அழிந்துபோகிறது. செயற்கை ரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம், நிலம் தன் நலம் இழக்கிறது. உடலின் இயல்பான வளர்ச்சி எக்குத்தப்பாக மாறுகிறது. உடல் பருமன், அதீத வளர்ச்சி, சீக்கிரமே பருவம் அடைவது, ஆண்மை இழப்பு... என ரசாயனக் கலப்புகளால் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் அதிகம். இயற்கை விவசாயத்தின் மூலமே அனைத்துவிதமான பயிர் சாகுபடியை வெற்றிகரமாக நிகழ்த்த முடியும் என்பதை, அனுபவத் தொகுப்பாக படைத்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கோ.நம்மாழ்வார்.
‘எந்நாடுடைய இயற்கையே போற்றி!’ என்ற தலைப்பில் பசுமை விகடனில் வந்த தொடரின் தொகுப்பு, இந்த நூல். இயற்கை முறை விவசாயம் மூலம் வாழ்வில் வளம் பெற உழைக்கும் ஒவ்வொருவருக்கும், அற்புதமான விளைச்சலை பெறுவதற்கான அரிச்சுவடிப் பாடமாக இந்த நூல் விளங்கும்!
-----------
எந்நாட்டுடைய இயற்கையே போற்றி! - நம்மாழ்வார்
Author(s): நம்மாழ்வார்
Edition: First
Publisher: விகடன் பிரசுரம்
Year: 2012
Language: Tamil
Commentary: decrypted from C628D2331A4130BA079E77F4C5681D92 source file
Pages: 76
City: Chennai
Tags: தமிழ், Tamil, சுயமுன்னேற்றம்
எந்நாடுடைய இயற்கையே போற்றி!
பதிப்பு
இயற்கை எனும் இனிய வரம்!
இயற்கையைப் போற்ற இதுவே நேரம்!
இந்த நூல்...
இயற்கையை நோக்கி முதல் அடி!
கால்நடைகளுக்கும் விஷம்!
உழவனின் நண்பன் நுண்ணுயிர்கள்!
திருவள்ளுவரின் தெளிப்பு நீர்ப்பாசனம்!
இயற்கையாகவே வளர்வதுதான் நோய் எதிர்ப்புச் சக்தி!
ஒரு ஏக்கர் நிலம்... அரை கிலோ மண்... துல்லியப் பரிசோதனை?
பயிர்ப் பாதுகாப்புக்கு எது தேவை?
கூட்டாளிச் செடிகளைக் கண்டுகொள்வோம்!
அலைந்து திரிந்தால் அண்டாது நோய்!
கூடுதலாக முட்டைப் போடும் ‘குப்பைக் கோழிகள்’!
ஆச்சர்யமூட்டும் அமெரிக்க ஆராய்ச்சி!
முட்டை சொல்லும் சேதி!
‘யூரியாவுக்குப் பதில் சாணி...’ இதுதான் இயற்கை வேளாண்மையா?
நிலத்தை வளமாக்கும் லேக்டோ பாக்டீரியா...
யூரியாவை நிலத்தில் நிறுத்தும் வேப்பம் பிண்ணாக்கு!
உருளைச் சதைக்கு உரம்போடும் ரசாயனங்கள்!
செடியை மரமாக்கும் இயற்கைக் கூட்டணி!
அடித்தட்டு மக்களின் பூமிப் பாதுகாப்பு சாசனம்!
"ரேடியோ பூ இருக்கையில் யூரியா எதற்கு?"