சிறியதே அழகானது

This document was uploaded by one of our users. The uploader already confirmed that they had the permission to publish it. If you are author/publisher or own the copyright of this documents, please report to us by using this DMCA report form.

Simply click on the Download Book button.

Yes, Book downloads on Ebookily are 100% Free.

Sometimes the book is free on Amazon As well, so go ahead and hit "Search on Amazon"

இ.எஃப்.ஷுமாஸர் ஜெர்மனியில் பிறந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பொருளாதரம் படித்தவர், நியூயார்க் பல்கலைகழகத்தில் பேராசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றினார், பின்பு பிரிட்டீஷ் தேசிய நிலக்கரிக் கழகத்தின் பொருளாதார ஆலோசகராகவும், பிரிட்டனின் மிகப்பெரிய இயற்கை வேளாண்மை அமைப்பான மண் கூட்டமைப்பின் (Soil Association ) தலைவராகவும், ஸ்காட் பேடர் நிறுவனத்தின் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 1955-ம் ஆண்டு பர்மா அரசு பொருளாதார ஆலோசனை வழங்க இவரை அழைத்தது. அங்கு சென்ற போதுதான் புத்த மதப் பொருளாதாரம் ("Buddhist economics") என்ற புதிய கோட்பாட்டை உருவாக்கினார்சூழலுக்கு ஏற்ற, அந்த பகுதியில் கிடைக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.. தனி மனித வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் அறத்துடன் கூடிய இந்த பொருளாதாரம் தான் ஏற்றது என வலியுறுத்தி வந்தார். மூன்றாம் உலக நாடுகளுக்கு (வளரும் நாடுகள்) பயணம் செய்த போது, இந்த கோட்பாட்டை ஆழமாக பேசி வந்தார். இந்த நாடுகளுக்காக இடைத்தரத் தொழில்நுட்பம் என்ற கொள்கையை உருவாக்கினார். இடைத்தரத் தொழில் நுட்ப வளர்ச்சிக் குழுமம் (Intermediate Technology Development Group Ltd..) என்ற அமைப்பின் நிறுவன தலைவராக இருந்தார். வாரணாசியில் காந்தி கல்வி மையம் ஏற்படு செய்திருந்த 'காந்தி நினைவு உரை' (Gandhi Memorial Lecture ) நிகழ்ச்சியில் கலந்து 1973-ம் ஆண்டு இந்தியா வந்திருந்தார். அந்த உரையின் போது மகாத்மா காந்தியடிகள் மீதும் அவரது சீடரும் கிராம பொருளாதார மேதையுமான ஜே.சி.குமரப்பாவின் 'நிலையான பொருளாதாரம்' தனக்குள் புதிய சிந்தனையை புகுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளர். மகாத்மா காந்தியடிகளை 'மக்கள் பொருளாதார அறிஞர்' என புகழாரம் சூட்டினார். 'சிறியதே அழகானது' என்ற சொல்லாடல் தமிழ் மண்ணுக்கு புதியது அல்ல.'சிறுக கட்டி பெருக வாழ்' என்பது கிராமத்து மக்களின் தற்சார்பு சிந்தனை. 1973-ம் ஆண்டு 'சிறியதே அழகானது' என்ற இந்த புத்தகத்தை ஷுமாஸர் வெளியிட்ட போது இது கவனம் பெறவில்லை. கனமான கருத்துக்கள் கொண்ட புத்தங்களை போலவே, இதுவும் ஆரம்பத்தில் புறக்கணிக்கப்பட்டது. ஆனால், அடுத்த பத்து ஆண்டுகளில் இப்புத்தகம் மாற்றுப்பொருளாதாரச் சிந்தனையாளர்களுக்கு புனித நூல் போல உருவானது என்பது வரலாறு. உலகம் முழுக்க லட்ச கணக்கான பிரதிகள் விற்பனையாகி வருகிறது. இந்த புத்தகம் பொருளாதாரச் சீர்கேட்டின் ஆதாரக் காரணிகளைக் கண்டறிந்து அதற்கான அறமான மாற்றை நம் கண் முன்வைக்கிறது. பல ஆண்டுகளாக அணுஆயுதத்தை எரிபொருளாகப் பயன்படுத்தலாமா, கூடாதா என்ற சர்சை மேலோங்கி வரும் இன்றைய சூழலில் நிச்சயம் இந்த புத்தகம் தேவைதான். புத்தகத்தின் மையக்கருத்து இதுதான். மனிதன் தன்னை மேம்படுத்திக் கொள்ள நினைத்து எவ்வாறு இயற்கையைச் சீரழிக்கிறான். அவனது பேராசைகள் எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது, இதிலிருந்து விடுபட காந்தியப் பொருளாதார வழி எவ்வாறு உதவி செய்கிறது, பௌத்த பொருளாதாரச் சிந்தனைகளை ஏன் நாம் கைக்கொள்ளக்கூடாது என்பதுதான். நவீன காலத்தின் முக்கியமான பிரச்சனை எரிபொருள். இதற்காகவே போர்களும் ஆக்ரமிப்புகளும் படுகொலைகளும் நடைபெற்று வருகின்றன, இயற்கையின் மூலதனமான எரிபொருள்கள் பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களால் எப்படி சுரண்டி எடுக்கபட்டு மிகப்பெரிய மோசடி நடைபெற்று வருகிறது என்பதையெல்லாம் உணர்வுபூர்வமாக அதன் பாதிப்புகளை ஆதாரங்களுடன் அடையாளம் காட்டுகிறார் ஷுமாஸர். அறமற்ற நபர்களின் நலனிற்காக எரிபொருட்கள் சுரண்டி எடுக்கபட்டு சந்தைப் பொருளாக பயன்படுத்தபட்டால் சுற்றுசூழல்சீர்கேடு அதிகமாகும். இதனால் அதிகம் பாதிக்கபடப் போவது ஏழை மக்கள்தான். எனவே எரிபொருள் விற்பனை சந்தையில் அடிநிலை ஏழைகளே இருவிதத்திலும் பலியாகிறார்கள். மாற்று எரிபொருள் பற்றி சிந்திக்கும் வேளையில் இயற்கையை வணிக நிறுவனங்கள் நாசம் செய்வதை ஏன் பொருளாதார நிபுணர்கள் கண்டுகொள்வதேயில்லை என்பதே ஷுமாஸரின் முக்கியக் கேள்வி. அணுசக்தியைப் பயன்படுத்துவது என்பது மாற்று எரிபொருளுக்கான தீர்வில்லை. அது ஓர் எளிய ஏமாற்று வேலை.இதனால் ஏற்படும் சாதகங்களை விட பாதிப்புகளே அதிகம். படிமஎரிபொருள்களை எப்படிக் கையாளுவது என்று முறையான பங்கீடு மற்றும் சுயவரம்புகள், கட்டுபாடுகள் ஏற்படுத்தபடாதவரை எரிபொருள் சந்தை பன்னாட்டு வணிக கம்பெனிகளின் ஏகபோகச் சொத்தாகவே இருக்கும். --------- சிறியதே அழகானது - இ. எப். ஷூமாசர் (E. F. Schumacher) - தமிழில்: நம்மாழ்வார்தாசன்

Author(s): இ. எப். ஷூமாஸர்
Edition: First
Publisher: CC
Year: 2020

Language: Tamil
Pages: 351
Tags: தமிழ், Tamil, சுயமுன்னேற்றம்

சிறியதே அழகானது